Breaking News

அதி புத்திசாலிகள்

என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவருக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்று எப்பொழுதுமே எண்ணம் உண்டு. அவர் எப்பொழுதும் தன்னை சுற்றி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் . எப்போதும் தான் பிஸி யாக இருக்கின்ற மாதிரி காமித்து கொள்வார். தேவை இல்லாமல் அடுத்தவர்களின் விஷயத்தில் தலை இடுவதில் மிகவும் ஈடுபாடு உள்ளவர்.
ஆனால் ஒரு வேலை என்பதை சரியாக முடிக்க தெரியாது. மாணவர்களை கேட்டால் அத என் சார் கேட்குரிங்க ஒரு மாசமா ஒரே டைட்டில் மட்டும் எழுதி போட்டு நடத்துறார் அப்பட்டீன்னு சொல்லுவாங்க.
கடைசியில் அவர் செய்வது எல்லாம் மிகவும் சரி என்று அனைவரும் சொல்வதுதான் நகைச்சுவைக்குரிய விஷயம். ஒருமுறை நானும் எனது நண்பர்களும் ஒரு சின்ன வேலை செய்தோம் . ஒரு பேப்பரில் சும்மா ஒரு வார்த்தையை எழுதி இந்த சுப்ஜெக்ட் உங்களுக்கு தெர்யுமா என்று மாணவர்களை விட்டு கேட்க சொன்னோம். மாணவர்களும் சென்று கேட்டனர் . yes i know it என்று அவர் பதில் அளித்து next month Microsoft இந்த சாப்ட்வேர் ரிலீஸ் பண்ணுதுப்பா என்று சொன்னாராம். மாணவர்கள் எங்களிடம் வந்து என்ன சார் இது புது சாப்ட்வேர் அப்படின்னு அந்த சார் சொல்லுறாரு என்று கேட்டனர். அடப் பாவிகளா ஒரு நிமிடம் அந்த வார்த்தைகளை பாருங்கப்பா அவை அனைத்தும் எங்கள் பேரோட முதல் வார்த்தை அதை எழுதிதான் கேட்க சொன்னோம் பார்த்துக்கோங்க என்றோம், இன்று வரை அந்த நண்பர் மாறவே இல்லை. இவர்களை என்ன செய்வது?

No comments

Total Pageviews

Pages