Breaking News

கலாமுக்கு கதை சொன்ன பாலு..

நமது முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்தார் . மாலையில் தான் நிகழ்ச்சி , அதனால் அருகில் இருந்த ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களை சந்தித்தார் . அப்போது பாலசுப்ரமணியன் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் அவர்க்கு ஒரு கதை சொன்னான். அந்த கதை: " படைப்பு கடவுளான பிரம்மாவிற்கு ஒருநாள் தான் படைத்த உலகை காண ஆசை வந்தது. அவரும் பூவுலகம் வந்தார், இங்கு வந்து பார்த்தால் ஒரே சண்டை! பிரம்மாவிற்கு கவலை ஆகிவிட்டது. நாம் உடனே இந்த உலகத்தினை திரும்பவும் மாற்றி அமைக்க வேண்டும் என்று உதவிக்கு ஒரு தேவதை மற்றும் ஒரு பூதம் இரண்டு பேரினை அமைத்து கொண்டார். தேவதை என்னால் முடியாது என்று சொல்லி விட்டு போய்விட்டது . பூதம் நான் செய்கிறேன் என்றது. பிரம்மாவிற்கு சந்தேகம் , நல்ல எண்ணம் கொண்ட தேவதை செய்யமுடியாது என்று கூறிவிட்டது . பூதம் சரி என்று சொல்கிறதே என்று . எனவே பூதத்திற்கு முன்று டெஸ்ட் வைக்க தீர்மானித்து முதலாவதாக வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணி வா என்று கூறினார். உடனே பூதம் அந்த பணியினை செய்தது. இரண்டாவதாக கடற்கரையில் உள்ள மணல்களை எண்ணி வா என்றார். பூதம் எண்ணிவிட்டு வந்தது. பிரம்மாவிற்கு சந்தோசம் தாங்கவில்லை. சரி முன்றாவது டெஸ்ட் பூதம் சரியாக செய்து விட்டால் உலகத்தினை சீரமைக்கும் பணியினை குடுத்துவிடலாம் என்று நினைத்து முன்றாவது பணியினையும் கொடுத்தார். பூதம் சென்றதுதான் இன்றுவரை வரவே இல்லை. அப்படி என்ன பணியினை கொடுத்தார் . பிரம்மா சொன்னது இதுதான் " தமிழ் நாட்டிற்கு சென்று அங்குள்ள அரசியல் கட்சிகளை எண்ணி விட்டு வா என்றாராம்".

No comments

Total Pageviews

Pages