Breaking News

நான் சந்தித்த மரணங்கள்

மரணம் ஒரு மனிதனை ஒரு நண்பனை ,சொந்தத்தை நம்மிடமிருந்து நிரந்தரமாக பிரிக்கும் ஒரு நிகழ்வு . நான் முதல் முதலாக அனுபவத்தில் இழந்தது ஒரு நண்பனை . நான் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது ஜமால் என்ற நண்பன் எனக்கு இருந்தான் . மிக நல்லவன் . கோபப்பட மாட்டான் திடீரென்று ஒரு நாள் மாலை செய்தி என் அப்பாவிற்கு வந்தது . ஏனென்றால் அவர் நாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் . " சார் , ஜமால் இறந்து விட்டான் என்று அவங்க அப்பா சொல்ல சொன்னார்கள் " என்று மற்றொருநண்பன் வந்து சொல்லிவிட்டு போனான். எனக்கு என்ன என்று புரியவில்லை . அண்ணனிடம் அப்படி என்றால் என்ன என்று கேட்டேன் . அதற்கு என் அண்ணன் "ஜமால் இனி வரமாட்டான் " என்று சொன்னான். "இனி எனக்கு சைக்கிள் சொல்லி தர வரமாட்டனா ? " என்று நான் கேட்டேன். அதனை தொடர்ந்து நான் இழந்தது என் அத்தை. என்னுடைய சின்ன அத்தை பெயர் கமலா . என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார் . நான் பீ. எஸ்.சி. முதல் வருடம் படிக்கும் பொது பெரிய அத்தை மகன் கணேசன் ஒரு நாள் காலையில் வந்து "மாமா கமலா சின்னம்மா நம்மள விட்டு போய்ட்டா" என்று அழுதான் . அது நான் சந்தித்த அடுத்த இறப்பு. நாங்கள் மன்னார்குடி சென்று பார்த்த பொழுது சாதரணமாக படுத்து உறங்கு வது போல் இருந்தது. நாங்கள் அவர்கள் விட்டிற்கு சென்றால் முகத்தில் வரும் சந்தோசம் அப்பொழுது இல்லை. மிகவும் கஷ்டத்தில் இருந்த குடும்பம் அது. பின் அதனை தொடர்ந்து பெரிய அத்தை இறந்தார். இப்படியாக ஒவ்வொரு சொந்தமாக சென்றார்கள். இப்பொழுதுதான் நான் இந்த உலகத்தில் எதுவுமே நிலை இல்லை என்று உணர்ந்துள்ளேன். சொந்தங்கள் நம்மை விட்டு போவது என்றால் அதை விட கொடுமை வேற ஒன்றும் இல்லை. அதை போலவே நான் வேலைக்கு சேர்ந்த இரண்டு வருடங்களில் எனது தாத்தா இறந்து போனார். என்னை மிகவும் பாதித்தது எனது சித்தி . எதுவுமே அனுபவிக்காமல் ஒரு வாரிசு இல்லாமல் இறந்தவர். கடைசி வரை எனக்கு ஒரு நல் வாழ்கை கிடைக்க வேண்டும் என கவலை பட்டவர். அத்துணை சொந்தங்களையும் ஒரு நிமிடம் நினைத்து அசை போட்டால் நெஞ்சு லேசாக வலிக்கிறது.

No comments

Total Pageviews

Pages