விடா முயற்சி .....
ரமேஷ் பிரபா ... சிறந்த கல்வியாளர். சன் டிவி வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நாம் அனைவருக்கும் தெரிந்தவர் . சன் டிவி தனது ஒளிபரப்பை ஆரம்பித்த பொழுது சன் டிவியில் முதலில் தோன்றியவர். சன் டிவியின் வணக்கத்தை சொன்ன ஒரு நல்ல பண்பாளர். ஒரு கல்வி நிகழ்ச்சியில் அவரை சந்திக்க நேர்ந்தது. இனிமையாக பேசினார். மாணவர்களுக்கு பயனுள்ள பல அறிய கருத்துக்களை கூறினார். பல நூல்களை மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் எழுதி உள்ளார். தஞ்சாவூர் புகைவண்டி சந்திப்பிற்கு நிகழ்ச்சி முடிந்து செல்லும் வழியில் அவர் தன்னை பற்றி சொன்னார். பல முறை சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கு முயன்றுள்ளார் . ஆனால் அங்குள்ளவர்கள் இந்த முஞ்சி எல்லாம் டிவியில் வந்தால் இழுத்து முடிவிட்டு போக வேண்டியதுதான் என்று அவரினை நிராகரித்து விட்டனர். விடா முயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்து சன் டிவியில் "சன் டிவி உங்களை வரவேற்கிறது " என்ற வாசகத்தை திரையில் சொன்ன பொழுதுதான் என் லட்சியம் தீர்ந்தது என்று சொன்னார்.அன்று முதல் மாணவர் நிகழ்ச்சி என்றால் எந்த ஒரு தொகையினையும் வாங்க கூடாது என்று இலவசமாக செய்து வருவதாகவும் கூறினார் . வாழ்க நும் தொண்டு என்று கூறி விட்டு வந்தோம்..




No comments