அன்றைய எனது ஊர் ....
நான் இந்த ஊருக்கு வந்த பொழுது எனக்கு மூன்று வயது. இயற்கையாக ஜொலித்த இந்த மதுக்கூர் , மிக அழகாக இருக்கும் . கட்டிடங்கள் கிடையாது. செல் டவர் கிடையாது . பஸ் ஸ்டான்ட் மிக அழகாக இருக்கும். இரண்டே சினிமா திரை அரங்கு கள் தான். ஐயப்பா மற்றும் எம். கே. எம். சரியாக மணி ஐந்து முப்பதுக்கு பாட்டு போட ஆரம்பித்து விடுவார்கள் . வேக வேகமாய் சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் சென்ற சினிமாவிற்கு இன்னும் ஞாபகம் உள்ளது. அதை போலவே சந்தைக்கு சென்றால் அங்கு உள்ள தம்பி மரைக்கார் கடையில் வாங்கிய சப்பல் மற்றும் வெடிகள் இன்றும் ஞாபகம் .
பள்ளிக்கு செல்லும்போது எடுத்து சென்ற மஞ்சள் கலர் பேக் இன்று வரை புதிதாக உள்ளது. பத்தாவது மற்றும் பனிரெண்டாவது ரிசல்ட் பார்க்க ஜி. டி.ஆர் கடைக்கு போய் கால் கடுக்க நின்று நம்பர் வந்து விட்டதா என்று பார்த்த போது விட்ட மூச்சு இன்றும் வாங்குகிறது. நாவல் வாங்குவதற்கு இரண்டு ருபாய் அண்ணனிடம் மற்றும் அப்பாவிடம் திட்டு வாங்கி சென்று நாவலை ஒரே முச்சில் படித்து முடித்ததில் கிடைக்கும் சுகம் இன்றும் நினைத்து பார்த்தால் அப்பப்பா மீண்டும் அந்த நாட்கள் வராதா என்று ஏங்க வைக்கிறது. பள்ளிப் படிப்பு இன்றும் தேனாய் அடி நாக்கில் இனிக்கிறது . பிள்ளையார் கோவில் பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வரை படித்த பொழுது ஒவ்வொரு வருடமும் பாஸ் ஆகி புது கிளாஸ் செல்லும் ஒரு சந்தோசம் இன்று இல்லை. பழைய வகுப்பு டீச்சர் வருட ஆரம்பத்தில் வகுப்புக்கு வந்து எல்லாரும் கிளம்பி அடுத்த கிளாஸ் செல்லுங்கள் என்று சொன்னவுடன் வேகமாக ஓடி இடம் பிடித்து அமர்ந்து புது கிளாஸ் வந்து விட்டோம் என்ற பூரிப்பு . அதே சமயம் பழைய கிளாஸ் பார்த்து அங்க அமர்ந்திருக்கும் டீச்சர் பார்த்து ஒரு வருத்தம். பைல் ஆகி அமர்ந்துள்ள பழைய வகுப்பு தோழனிடம் கவலைபடாதே எங்கப்பாட்ட சொல்லி பாஸ் பண்ண சொல்லுறேன் என்று கூறும் நட்பு இன்று இல்லை . ராஜ் பவன் ஹோட்டல் இன்றும் நினைவில் நிற்கும் ஒரு இடம். பஸ் நிறுத்தத்தை அடைந்த வுடனே முக்கில் வந்து ஏறும் ராஜ் பவன் ஹோட்டலின் பூரி மசாலா வாசனை இன்று வரை அகல வில்லை. "வாங்கோ , என்ன வேணும் " என்று பாசத்துடன் கவனிக்கும் சர்வர் சங்கரன் இன்று எங்கே ? அவர் சுத்தமாக நெற்றியில் திருநீறுடன் இருக்கும் காட்சி நினைவை விட்டு செல்லவே செல்லாது.
இன்றைய மதுக்கூர் ?????




எல்லாம் அருமையான பதிவுகள் சீனி,,,,நினைத்தாலே இனிக்கும் நாட்கள் அவைகள்.... இப்படிக்கு, தவ்லத்
ReplyDelete