நிறைவேறாத ஆசைகள் ...!
நாம் அனைவருக்கும் உண்டு. நகைச்சுவை நடிகர் தாமு அனைவரும் அறிந்தவர். மன்னார்குடி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் . நானும் நண்பர் பால.ஷண்முக வேலன் அவர்களும் சென்றிருந்தோம். மிக அற்புதமாக அனைத்து நடிகர்கள் விலங்குகள் போல் மிமிக்ரி செய்து காட்டினர் தாமு. நிகழ்ச்சி முடிந்தவுடன் பேசி கொண்டிருக்கும் போது நான் இத்தனை நிகழ்ச்சிகள் நடத்தினாலும் எனக்கு ஒரு குறை உள்ளது என்றார். என்ன என்று நான் கேட்டேன் . நீங்கள் அனைவரும் கேட்டு சிறிது மகிழ்கிறீர்கள் ஆனால் என்னை பெற்ற தாயினால் நான் நடத்துவதை பார்க்க மட்டும் தான் முடியும் . கேட்க முடியாது . எனக்கு நிறைவேறாத ஆசை என்ன வென்றால் என் தாய் ஒரு முறை மட்டும் என் மிம்க்ரி குரலினை கேட்க வேண்டும் என்றார். நடக்கும் நண்பரே என்று வாழ்த்திவிட்டு வந்தோம்.




No comments