எனக்குள்ளே ஒரு குழப்பம்..
ஒரு நாள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன். முதல் நாள் நடந்த சம்பவம் ஒன்றினை அசை போட்டுகொண்டே பஸ் ஸ்டாண்ட் சென்று கொண்டிருந்தேன் . இனி யாரிடமும் அனாவசியமாக பேசக்கூடாது என்று முடிவெடுத்து தலை குனிந்து சென்று கொண்டிருந்த பொழுது ஒத்த மாட்டு வண்டி கணேசன் எதிராக வண்டியில் வந்து கொண்டிருந்தார். நான் ஒன்றும் சொல்ல வில்லை. அவராக " என்ன தம்பி பார்த்துட்டு பாக்காம போற , அதிகம் படிச்ச புள்ள , அப்படித்தானே நடந்துபே , கவுரவம் பாக்குற நீ " என்று சொல்லி விட்டு போனார். நான் அதற்கு "அப்படி எல்லாம் ஒன்றும் இல்ல அண்ணா " ஏதோ சிந்தனை தவறா நினசுக்கதிங்க " என்று சொல்லி விட்டு அடப் பாவிகளா இப்படி கூட நினைப்பீர்களா என்று நினைத்து இனி நாமாகவே பேசி விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து சென்று கொண்டிருந்தேன் . எதிராக பால் வண்டி சண்முகம் வந்து கொண்டு இருந்தார், நானகவே " அண்ணா நன்றாக உள்ளிர்களா " என்று கேட்டேன் . அவர் என்னை கண்டு கொள்ளவே இல்லை. எப்படி இப்படி பட்ட மனிதர்களை அணுகுவது ! சொல்லுங்களேன்.




No comments