Breaking News

நட்பு - இதற்கான அர்த்தம்தான் என்ன?

நண்பர்கள் - மனைவிக்கு நிகராக அனைத்திலும் பங்கு கொள்பவர்கள் . எனக்கும் அப்படி உண்டு. நான் சந்தித்த சில வினோதமான நண்பர்கள் . நான் எம்.எஸ்.சி படிக்கும் பொழுது என் கூடவே இருந்தவன் ஒரு நண்பன். இன்று வரை கல்லூரியில் என்னையும் அவனயும் தான் பேசுவார்கள். ஒரு முறை அவன் விட்டிற்கு கூட வந்து தங்கி இருக்கிறான். அவன் தங்கைக்கு கல்யாணம் என்று கூட அழைப்பு விடுத்தான் . நாளடைவில் தொடர்பு இல்லாமல் போனது. எனது மாணவர்கள் கூட " நீங்க ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் என்றால் யாருக்கு முதலில் கல்யாணம் நடக்கும்?" என்றெல்லாம் சொல்லி பேசி இருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு கல்லூரியின் ஆண்டு விழா தொடர்பான வேலைகளை செய்து கொண்டு கல்லூரி மெயின் வாசலில் நான்,பிரின்சிபால் மற்றும் உதவியாளர்கள் நின்று கொண்டு இருந்தோம். அப்பொழுது ஒரு கண்டசா மிக வேகமாக வாசலில் வந்து நின்றது. பிரின்சிபால் என்னிடம் யாராவது டூர் செல்கிறவர்கள் நேரமாகிவிட்டது என்று இங்க இருக்கும் தர்காவில் தொழுக வந்திருப்பார்கள் நீ சென்று விசாரித்து அவர்களை உள்ளே விடு என்று கூறினார். நானும் சென்று பார்த்த பொழுது " மாப்ளே , நல்லா இருக்கியாட இன்னும் இங்கேதான் இருக்கியா? " என்று ஒரு பரிச்சியமான குரல். எனக்கு யாரென்று புரியவில்லை . "நாந்தாண்ட மாப்ள , என்று அவன் பேரை சொல்லி ஒரு குழந்தையுடன் உள்ளே வந்தான்" நானும் மிக சந்தோஷ மா அவனை வரவேற்று ப்ரின்சிபளிடம் அறிமுகம் செய்தேன். பேசி கொண்டு இருக்கும் பொது "எப்போ மாப்ள கல்யாணம், என்று என்னிடம் கேட்டான்" உனக்கு முடித்தவுடன் என்று சொன்னேன். அதற்க்கு அவன் சாரி மாப்ள " எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது , இதுதான் என் குழந்தை " என்று அவன் மனைவி மற்றும் புது சொந்தங்களை அறிமுகம் செய்து வைத்தான். "மிகவும் நெருங்கி என் உயரை விட மேலாக பழகியவன் " நானும் சிரிப்புடன் வாழ்த்தி கல்லூரியை சுற்றி காட்டினேன். இது போல எனக்கு நண்பர்கள் அதிகம்.

No comments

Total Pageviews

Pages