Breaking News

சந்தித்ததில் சிந்திக்க வைத்தவர்கள் ....

ஒரு சமயம் நான் ஜே. சி. இஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளராக செயல் பட்ட பொழுது( அது ஒரு தனி சம்பவம்) நடன போட்டி ஒன்றினை நடத்தினோம் . அதற்க்கு பரிசு குடுக்க பிரபலமான பேச்சாளர் திரு அய்யா சுகி சிவம் அவர்களை அழைத்திருந்தோம் . அவரை அழைத்துக்கொண்டு விழா நடக்கும் வரை அவருக்கு உதவியாக நானும் நண்பர் செல்வம் அவர்களும் இருந்தோம். விழா விற்கு வருவதற்கு முன் அவர் கும்பகோணத்தில் தங்கி இருந்தார் . நானும் செல்வமும் அதிகாலை ஐந்து மணிக்கே சென்று காத்திருந்தோம். சரியாக ஏழு முப்பதுக்கு நாங்கள் அவரின் அறைக்கு சென்று சந்தித்தோம் . மிகவும் எளிமையாக இருந்தார். ரொம்ப நாள் பழக்கப்பட்ட நண்பரைப்போல் பேசினார். அவரை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டைக்கு மதியம் வந்து சேர்ந்தோம் . வரும் வழி எல்லாம் குட்டி குட்டி கதையாக எங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லி வந்தார். ஊர் வந்ததே தெரிய வில்லை. அவரை ஒரு ஹோட்டலில் தங்க வைத்து விட்டு நான் மட்டும் சாயங்காலம் திரும்பவும் சென்றேன் . அப்பொழுது அவர் அருகில் இருக்கும் ஆவுடையார் கோயில் செல்ல வேண்டும் என்றார் . ஒரு நண்பரின் காரில் சென்றோம் . திரும்ப வரும் வழியில் என்னை பற்றி அய்யா சுகி சிவம் அவர்கள் விசாரித்தார். அப்பொழுது உங்களுக்கு தொண்டையில் எதாவது பிரச்சினை உள்ளதா என்று கேட்டார். ஆம் என்றேன் நான். சரியான மழை வேறு. பட்டுக்கோட்டை வந்தவுடன் ஒரு நாடு மருந்துக்கடை அருகில் காரினை நிறுத்த சொன்னார். அவரே இறங்கி சென்று ஒரு பொட்டலம் மருந்து வாங்கி வந்து திரும்ப வந்து காரினை எடுக்க சொன்னார். நான் கேட்டேன் " அய்யா . என்னிடம் சொன்னால் நான் வாங்கி வந்திருப்பேனே " என்று அதற்கு அவர் சொன்னார் " தம்பி மருந்து வாங்க செல்லும் பொழுது சம்பந்த பட்டவர்கள் செல்ல வேண்டும்" தவிர இந்த மருந்தை நான் உங்களுக்கு தான் வாங்கினேன், இதனை பாலில் கலந்து இரவில் குடித்து வாருங்கள் " உங்கள் டான்சில்ஸ் சரி யாகி விடும் என்று" டான்சில்ஸ் சரியகிறதோ இல்லையோ " உலகமே பார்க்கும் ஒரு பேச்சாளர் இப்படி இருக்கிறாரே ! நாம் எல்லாம் எம்மாத்திரம் என்று மனதில் நினைத்து கொண்டேன்.

No comments

Total Pageviews

Pages