லட்சியம் இல்லாத பாதைகள்
பள்ளி படிப்பு படிக்கின்ற பொழுது எனக்குள் பல ஆசைகள் சிறகடித்து பறக்கும். என்னவாக ஆகப்போகிறோம் என்ற லட்சியம் எல்லாம் கிடயாது . ஹெட் மாஸ்டர் பிள்ளை என்ற பெயர் மற்றும் நன்றாக படிப்பவன் என்ற பெயர். அதே சூழ் நிலையில் படித்து முடித்து ஹை ஸ்கூல் சென்ற போதுதான் நமக்கு ஒரு துறை வேண்டும் என்ற எண்ணம் பத்தாம் வகுப்பு படிக்கும் போது வரத்துவங்கியது . அப்பொழுதும் ஒரு நிலை அற்ற தன்மை . சரி என்ன படிக்கலாம் என்ற நிலையில் கம்ப்யூட்டர் படிக்கலாம் என்று முடிவு செய்து போனால் அங்கே கம்ப்யூட்டர் படிப்பு என்பது தமிழ் மீடியத்தில் இல்லை. சரி பட்டுக்கோட்டை பள்ளியில் படிக்கலாம் என்று சென்றால் அங்கிருந்த எ.டி. பீ . தேவாசிர்வதம் என்ற ஹெட் மாஸ்டர் இடம் அளிக்க வில்லை. கஷ்ட பட்டு அங்கே கம்ப்யூட்டர் படிப்பு. ஆனால் நான் செய்த ஒரு புண்ணியம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தது. சரி அடுத்து ? அப்பொழுதுதான் பீ. ஈ படிக்கலாம், டாக்டர் படிக்கலாம் என்ற எண்ணங்கள் மேலோங்கி நின்றன. பிளஸ் டூ படித்து முடித்தவுடன் மறுபடியும் ஒரு நிலை அற்ற தன்மை . எந்த ஒரு லட்சியம் இல்லாமல் காதிர் மொஹிதீன் கல்லூரியில் மூன்று வருட பீ. எஸ் .சி மற்றும் இரண்டு வருட எம் . எஸ். சி படிப்புகள். நண்பர்களுடன் ப்ரோக்ராம்மிங் துறைக்கு செல்லலாம் நிறைய சம்பாதிக்கலாம் என்று முடிவு எடுத்த போது செல்ல முடியாத தடை. சரி அங்கேய விரிவுரை யாளராக வேலை பார்க்கலாம் என்று முடிவு எடுத்து வேலைக்கு சென்று இன்று வரை பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. மேலும் நடுவில் எம்.பில் படிப்பு வேறு . . ஆனால் ஒரு திருப்தி . நம்மிடம் படித்த மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதை நினைத்து பார்க்கும்போது ...!




No comments